இந்தியாவில் பழங்குடியின பெண் அதிபராக பதவியேற்பு!!


 இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி ஏற்றுள்ளதன் மூலம் பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி எனும் சிறப்பை பெற்றுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதி மன்றின் பிரதம நீதியரசர் என்.வி ரமணா முன்னிலையில் இன்று முற்பகல் 10.15 க்கு இந்த பதவி ஏற்பு நிகழ்வு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு நடந்து முடிந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு (6,76,803) வெற்றி பெற்றிருக்கிறார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை(3,80,177) விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.