யாழில் பெற்றோலால் ஏற்படும் பிரச்சனைகள்!


அண்மையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்ற பெண் ஒருவர் மாலை நேரமானதால் ஊர்காவற்றுறைக்கு செல்வதற்காக முச்சக்கரவண்டி ஓட்டுனரிடம் பேரம் பேசியுள்ளார்.

அங்கு செல்வதற்கு ஓட்டுனர் 11ஆயிரம் என்றதும் தலை சுற்றி விழாத குறையாக 1500 ரூபா கொடுத்து யாழ். மாட்டின் வீதிக்குச் சென்று உறவினர் வீட்டில் தங்கி மறுநாள் பஸ்ஸில் பயணித்துள்ளார்.

யாழ் நகரிலிருந்து ஊர்காவற்றுறைக்கு பஸ்ஸில் பயணிப்பதாயின் அரை மணி நேரமே எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க முன்பு யாழ் நகருக்குள்ளே பயணிப்பதாயின் 3 இலக்கங்களில் பணம் அறவிட்ட முச்சக்கர வண்டிச்சாரதிகள் பலர் இப்போது 4 இலக்கங்களில் கேட்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தினமும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் தம்மிடம் யாழ் நகர முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் பெற்றோல் தட்டுப்பாட்டை காரணம் கூறி பெருமளவு பணத்தை கறப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.