தலைவன் நீயே  ஒருவன்..!


கங்கை கடாரம் ஆகாயம் வென்ற

எங்கள் தலைவன்!


வெங்கொடுமை சாவிலும்

சங்கு முழங்கி சரித்திரம் படைத்த

எங்கள் தலைவன்!


ஞாலம் சூழ்ந்து நின்று எம் கோலம் கலைத்த கணத்திலும்

இலக்கின் பிடிவிலகா

எங்கள் தலைவன்!


குள்ளநரி நாடுகள்

நஞ்சுக்குண்டு கொண்டு

தோழர்களை துளைத்தபோதும்

மக்களை அழித்தபோதும்

மனம் மாறாது மானங்காத்து நின்ற

எங்கள் தலைவன்!


மாவீரர் வழி நின்று

உரிமைக்காக  உயிர்கொடுப்பேனே தவிர

சரணடைந்து மாளமாட்டேனென

வீரத்தோடு தோளுயுயர்திய

எங்கள் தலைவன்!


பிடரியில் கால்பட அலறியோடும் கோத்த மகிந்தா போல் ஒருபோதும் பிடரி குனியாத

எங்கள் தலைவன்!


மக்களுக்கான கவசமாய்

தான் பெற்ற பிள்ளைகளை களத்திலே

வீரத்தோடு நிறுத்தியவன்

எங்கள் தலைவன்!


இவங்கள் பிள்ளைகள் போல்

ஏரோப்பிளேன் எடுத்து உயிர்ப்பிச்சை எடுக்காது

உயிர்மூச்சை உயிர்மண்ணுக்காக விட்டவர்கள் எங்கள் தலைவன் பிள்ளைகள்!


உலகிலே ஒருவனாலும் முடியாத நேர்மையை தன் இனத்திற்காக நிகழ்திக்காட்டியவர்

எங்கள் தலைவர்!


நாடிழந்தும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ

வழிகாட்டியவர்

எங்கள் தலைவர்!


உங்களுக்கு கிடைக்காத

பெரும் பொக்கிசம்

எங்கள் அழகுத்தலைவர்!


ஆண்தாயாய்

அன்பால் அரவணைப்பால் பண்பால் பாசத்தால்

இதயத்தில் இடம்பிடித்தவர்

எங்கள் தலைவர்!


எப்போதும்

இவரை வெல்ல

ஒருவனும் இல்லை

திமிரோடு சொல்வோம் இவரே

எங்கள் தலைவர்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.