காணாமல் போனவர்கள் உகாண்டாவில் அடிமைகளாக உள்ளனரா!!

 


அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உகண்டாவில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் தொழிற்சாலைகளில் அடிமை பணியை செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்துக்குச் சொந்தமான உகாண்டாவில் உள்ள 11 தொழிற்சாலைகளில் எங்கள் பிள்ளைகள் ஊதியம் இன்றி தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள் எமது பிள்ளைகளை கூலித்தொழிலாளிகளாக்கி வைத்திருக்கலாம்.

 தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் வேலுப்பிள்ளை கணநாதன் என்ற தமிழர் இருக்கிறார்,'' என வடக்கு கிழக்கு மாகாண பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் யோகராசா கலைரஞ்சனி தெரிவிக்கின்றார்.

இந்த வருட ஆரம்பத்தில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்பதிக்கு புனித யாத்திரை செல்வதற்காக உகண்டாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபரும், கென்னியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான வேலுபிள்ளை கணநாதன் தனியார் ஜெட் விமானத்தை வழங்கியதாக நம்பப்படுகிறது. 

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கலைரஞ்சனி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகம் ஒன்று திரண்டு தமது பிள்ளைகள் உகாண்டாவில் இருக்கிறார்களா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்வதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

“நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் கொல்லப்படவில்லை. அவர்கள் அனைவரும் இந்த ராஜபக்ஷ குடும்பத்தின் அடிமைகளாக வாழ்கிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

13 ஆண்டுகளாக எங்கள் உறவினரை தேடி வருகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் சொல்லும் என நான் நம்பவில்லை.

இந்த ஆட்சி மாற்றம் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்யாது.” இலங்கையை அவதானித்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியையும் பெற்றுத்தருமாறு அவர் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.