கொலை - கவிதை!!

மனதில் ஓரத்தில் 

முள்ளென உறுத்திக் கொண்டிருக்கிறது 

சில ஞாபகத்தின்

சிதறவ்கள்.....


முலாமிடப்பட்ட நேசங்கள்

சாயம் கலைந்து கிடக்கிறது.

விட்டுக்கொடுத்த போதும் - என்னுள்ளே

வெறுமை பூத்திருக்கிறது பேரலையாய்...


மேகப்படுக்கையில்

முகிலின் ஆட்சியைப்போல

கலைந்தும் கலையாமலும்

நினைவுகளின் பிசுபிசுப்பு.


துருத்திக் கொண்டிருக்கும்

கண்ணீருக்குள் 

வைரமாய் ஜொவித்துக்கொண்டிருக்கிறது

உனதன்பு....


ஒரு ஆங்கார கீர்த்தனையைப்போல

என்னை நானே மீட்டிக் கொண்டிருக்கிறேன் 

உன் நினைவுகளைக் கொல்லும்

திவ்விய நிமிடங்களில்....கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.