சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு இல்லை- சுமந்திரன்!!

 


பொலிஸார் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளும் மக்களை தடுக்க முயலும் சட்டவிரோத அறிவிப்பு இது என தெரிவித்துள்ளார்..

பொலிஸ் சட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ பொலிஸ் ஊரடங்கு என்ற ஒன்றை அங்கீகரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகவே நான் அனைத்து பிரஜைகளிற்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.