பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு!!

 


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.


கியூசான் நகரில் உள்ள Ateneo de Manila பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவுக்காக பலர் கூடியிருந்த நிலையில், வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.


அங்கிருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.