விசேட உரையாற்றிய ஜனாதிபதி!!

 


கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

இதன்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே உகந்தது எனவும் அவர் கூறினார். எனவே நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இது அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. இது தொடர்பில் யாரும் விவாதம் செய்ய மாட்டார்கள். கொழும்பில் உள்ள சில அரசியல்வாதிகள் விவாதிப்பார்கள். கிராமத்தில் அது இல்லை. கிராமத்து விகாரைக்கு செல்லுங்கள். அங்கு என்ன சொல்கிறார்கள். கிராமத்து பாடசாலைக்கு செல்லுங்கள். என்ற கூறுகிறார்கள். நாம் ஏன் இந்த தகவலை கூறுவதில்லை.

நாம் தற்போது ஒன்றிணைய வேண்டும் என்று. அந்த தகவலை கொண்டு செல்லுங்கள். நீங்கள் அனைவரும் கடந்த மே 9 ஆம் திகதி முதல் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். சிலருக்கு வீடு இல்லாமல் போனது. சிலருக்கு கிராமத்தில் இருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. அச்சுறுத்தல் இருந்தது. அழைத்து கூறினார்கள் உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று.

அந்த காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே நாம் ஒன்றிணைய முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம். அவ்வளவுதான் நான் கேட்கிறேன். இந்த இடத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு கட்சியினரும் உள்ளனர். இந்த அரங்கில் மீதமுல்ல பகுதியும் நிரம்பி இருப்பதை பார்க்க எனக்கு விரும்பம் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களையும் அழைத்து வரை முடியாதா? இதை நிரப்புவோம். இதை ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.