சபாநாயகர் வெளியிட்ட எச்சரிக்கை!!

 


நாட்டில் உண்மைகள் மற்றும் சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்த அறிக்கைகளை வெளியிடுவது, பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று சபாநாயகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் கொந்தளிப்பான பொது உணர்வைக் கருத்தில் கொண்டு, அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abeywardena) அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செயல்முறை அல்லது வேறு ஏதேனும் நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் தேவையான எந்த விளக்கங்களையும் வழங்க நாடாளுமன்ற அலுவலகம் தயாராக உள்ளது.

எனவே அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது நாட்டின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து குடிமக்களும் அமைப்புகளும் உதவுமாறு சபாநாயகர் அலுவலகம் கோரியுள்ளது.

இதனையடுத்து அதன் நம்பகத்தன்மையை பரிசீலித்த பின்னர் ஜூலை 15ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகலை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு இடம்பெற்றதன் பின்னர், மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2022 ஜூலை 16ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகல் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.