இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு!!



தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது. 


இந்த ஆலோசனையானது இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதன் காரணமாக அங்கு மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகள் பாதிப்படைந்துள்ளன.


எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளாந்தம் மின்வெட்டு ஏற்படுகிறது. எரிபொருளுக்காக மக்கள் பல மணிநேரம் வரிசையில் காதிருக்கின்றனர். 


அத்தோடு போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. வீதிமறியல் மற்றும் அமைதியின்மை எனபன முன்னறிவிப்பின்றி இடம்பெறுவதாகவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.