சுமந்திரன் பிரதமரானால் மகிழ்ச்சி!

புதியவர்கள், புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசு அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால், அதனால் எந்த பயனும் கிடையாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமரும், பிரதமர் செயலிழந்து போனால் அவருக்கு முடியாத போனால் ஒரு மாத காலத்திற்கு சபாநாயகர் பதவியை ஏற்று நடத்த உரித்திருக்கின்றது.

சுமந்திரன்  பிரதமரானால் மகிழ்ச்சி! | Sumandran Is My Disciple Happy To Be The Pm

ஆகவே ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமரும் பிரதமருக்கு பதிலாக சபாநாயகருமென அந்த மூன்று பேருக்குமே அந்த உரித்து காணப்படுகின்றது. தியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாது.

எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது என்பதை விட எங்களிடம் என்ன கொள்கைகள் என்ன மாதிரியான விடயங்களை முன்வைத்து நாம் அரசாங்கத்தை அமைக்க போகின்றோம் என்பதே முக்கியம் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை சுமந்திரன் பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனை பிரதமராக நியமிக்கலாம் என அணுகிய நிலையில் அதை எல்லா கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்த பதவியை ஏற்க முடியும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதை சுமந்திரனிற்கு தெரிந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார். சுமந்திரனை பிரதமராக அழைத்து என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன். ஏனென்றால் அவர் என்னுடைய மாணவர். பல வருட காலமாக தெரிந்தவர் என்ற வகையில் அதற்கு நான் எதிர்ப்பு அல்ல. ஆனால் இது பற்றி இணைய வழிக் கலந்துரையாடலில் கூறியதன் காரணமாக இன்று அது பரகசியமாகியுள்ளது.

ஆனால் சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பிலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பில் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்வி. இரண்டாவது கேள்வி தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும்.

காரணம் எந்த நேரமும் மத்திய அரசுடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பு தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மறந்து விடக்கூடிய சந்தர்ப்பம் அங்கு ஏற்படுகின்றது.

 எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டது. சம்பந்தனும் அதே போலவே. இந்நிலையில் சுமந்திரன் இவ்வாறு பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ் கட்சிகள் அனைவரினதும் ஏகோபித்த விருப்பை பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.