24 வயது இளைஞனைத் திருமணம் செய்த 64 வயதுப்பாட்டி!!

 


அமெரிக்காவில் 61 வயது பெண்ணிற்கும், 24 வயது இளைஞனுக்கும் திருமணம் நடந்த நிலையில் குழந்தை தொடர்பில் தம்பதி முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

குரான் மெக்கெய்ன்(Quran McCain) (24) என்பவரும் மெக்ரிகோர்(McGregor) (61) என்ற பெண்ணும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் தங்கள் கனவு குழந்தையை பெற்று கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக £120,000 (இலங்கை மதிப்பில் ரூ. 5,22,79,829.74) செலவிட தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.

குரான் மெக்கெய்ன்(Quran McCain)கூறுகையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற கொள்ள 6,000-120,000 யூரோ வரை ஆகும். நாங்கள் தேர்ந்தெடுத்த வாடகைத் தாய் கிடைப்பது எல்லாம் அதிர்ஷ்டம்.2023 வசந்த காலத்தின் பிற்பகுதியில் குழந்தை பிறக்கும் என கூறினார். இது McCainனின் முதல் குழந்தையாகும். ​மெக்ரிகோர்(McGregor)லுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 17 வயதில் ஒரு பேரகுழந்தையும் உள்ளது. 

மெக்ரிகோர்(McGregor) கூறுகையில், இந்தப் புதிய பயணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மற்றொரு குழந்தை என்பது ஒரு ஆச்சரியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். அவர் எப்போதும் குழந்தைகளை விரும்புகிறார், நான் அவருடைய குழந்தைக்கு தாயாக இருக்க விரும்புகிறேன்.

ஆனால் எனது வயதின் காரணமாக நாங்கள் ஒரு வாடகைத் தாய் மூலமாகவோ அல்லது குழந்தையை தத்தெடுத்து தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

வயது வித்தியாசம் காரணமாக இந்த ஜோடி அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பாலும் இருவரையும் பாட்டி - பேரன் என்று தவறாக நினைத்து விடுவது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.