போதைப்பாவனையால் 20 வயது இளைஞன் பலி!!
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது .
நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய குறித்த இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சலம் மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது .
இதனையடுத்து உயிரிழந்த இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .
அதேவேளை யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை