அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - ரணில் சந்திப்பு!!
இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், ஒரே இரவில் ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க ஜனாதிபதியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது.
குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல.
மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை