மானிப்பாயில்உள்ள சுப்பர் மார்க்கெட் மீது ஒரு குழு தாக்குதல்!

 

இன்று மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.


பின்னர் அங்கு பணிபுரியும் தெல்லிப்பளைமுகவரியில் வசிக்கும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இளைஞனின் இடது கையை வெட்டிச் சென்றனர்.


கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தற்போது காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.