புலம்பெயர் தமிழ் சில அமைப்புகள் மீதான தடை நீக்கம்

 


சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

எவ்வாறாயினும், தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

பயங்கரவாதம் அல்லது வேறு காரணங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருந்த 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

அதற்உலகத் தமிழ் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ் (ATC), ஈழ மக்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் மீதான தடை பாதுகாப்பு அமைச்சினால் நீக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறையின் 4 (7) ஆவது ஒழுங்கின்கீழ், இந்த தடை நீக்கம் செய்யப்படடுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.