கற்பூரப் புல்வெளியில், பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி!📸

 


ஓரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களைவீழ்த்திய கற்பூரப் புல்வெளியில், பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி

வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 219ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022இன்று பல இடங்களிலும் நினைவுகூர்ப்பட்டுவருகின்றது.


அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு - முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், கற்பூரப் புல்வெளியில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முள்ளியவளை கிழக்கு மூலக்கிளைச் செயலாளர் நடராசா அசோக்குமார் ஆகியோருடன் மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.