வல்வையில் இடம்பெற்ற வல்வைப் படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
02.08.1989அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் வைத்து கொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33வது வருட நினைவேந்தல் இன்று மாலை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நினைவுகூரப்பட்டது.
இந்நினைவேந்தலில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை