போலந்து நாட்டவர் போதைப்பொருளுடன் கைது!!

 


 24.5 கோடி ரூபா  பெறுமதியான கொக்கேயினுடன் போலந்துநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


கொலம்பியாவில் இருந்து கட்டார் எயார்வேய்ஸின்  QR - 662 விமானத்தின் ஊடாக வருகை தந்த  இந்த நபர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தொலைநகல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் சுருள்களுக்குள் மறைத்து வைத்துவைக்கப்பட்டிருந்த குறைந்தது 5 கிலோ எடையுள்ள கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் சந்தேக நபர்  ஒப்படைக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.