ஒருவர் நீரில் மூழ்கி பலி

 


கந்தளாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


பாணந்துரை, அம்பலந்துரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மொஹம்மட் முஸ்னி என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (04w) மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் செய்து வந்த நிலையில் பாணந்துரையில் இருந்து கந்தளாயிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற போதே கந்தளாய் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.