டெங்கு அபாய வலயங்களாக 67 இடங்கள் அடையாளம்!!

 


நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் வேகமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் 5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை செல்பவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.


ஓகஸ்ட் மாதத்தின் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களாவர்.


எனினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், 67 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதைய மழைக்காலத்துடன் இந்த அபாய வலயங்கள் அதிகரிக்கலாம் எனவும் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டிடங்கள் கட்டும் இடங்கள் போன்றவற்றை உடனடியாகச் சுத்தப்படுத்தாவிட்டால், அபாயகரமான நிலைமை உருவாகும் என மருத்துவர் சமரவீர வலியுறுத்தினார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.