வட மாகாண இளைஞர் யுவதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

 வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் இலவச அடிப்படை ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த கற்கை நெறியில் கலந்து கொள்வோருக்கு கற்பித்தல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு விசேட ஆங்கில வகுப்புகளும் இடம்பெறவுள்ளது.


மேலும் இந்த ஆங்கில வகுப்பானது 6 மாத காலத்தை கொண்ட வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறும்.


18-45 வயதிற்கு இடைப்பட்ட ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடிவதோடு கற்கை நிறைய பூர்த்தி செய்பவர்களுக்கு பரீட்சைகள் நடாத்தி சான்றிதழ் வழங்கப்படும்.


மேலதிக விவரங்களுக்கு 0212232072, 0779019814 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.