சீனாவுக்குப் பதிலடி கொடுத்தது இந்தியா!!
சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சமீபத்தில் இந்தியாதொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்களில் உள்ள உள்ளாந்த விடயங்களை நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக வைத்து இலங்கை மீது சில நாடுகள் அழுத்தங்களை முற்றிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த உள்ளார்ந்த விடயங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்.
இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு அது தனது தீர்மானங்களை சுதந்திரமாக எடுக்கின்றது. இதுவரை இந்திய இலங்கை உறவுகளை பொறுத்தவரை எங்களின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கைக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
அதேசமயம் இந்த வருடம் மாத்திரம் இந்தியா முன்னொருபோதும் இல்லாதவகையில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 3.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இந்தியாவும் இலங்கையின் ஜனநாயகம் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழுமையாக ஆதரவாகவுள்ளது. அதேவேளை இந்திய சீன உறவுகளை பொறுத்தவரை பரஸ்பர மதிப்பு பரஸ்பர உணர்வுபூர்வமான தன்மை பரஸ்பர நலன்கள் ஆகிய உறவுகளை முன்னேற்றகரமானதாக்குவதற்கு அடிப்படையான வி;டயங்கள் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்திவந்துள்ளது.
அத்துடன் எங்கள் பாதுகாப்பு கரிசனைகளை பொறுத்தவரை இது ஒவ்வொருநாட்டினதும் இறைமையை அடிப்படையாக கொண்ட உரிமை. எனவே நாங்கள் எங்களின் நலன்களை அடிப்படையாகவைத்தே சிறந்த மதிப்பீடுகளை மேற்கொள்வோம்.
இது இயல்பாகவே எங்கள் பிராந்தியத்தில் காணப்படும் நிலைமைகளை குறிப்பாக எல்லையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் எடுக்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை