“பன்னாட்டுக் குற்றங்கள்” – பொத்தக வெளியீடு – யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கு 28.08.2022


பொத்தகத்தை யாழ்ப்பாணத்தில் வெளியிடுவோமா? என்ற என் சந்தேகக் கேள்விக்கு ”வெளியிடுவம்-சதீஸ் இருக்கப்பயமேன்” எனப் பதில் தந்தது முதல் நிகழ்வு நிறைவு வரைக்கும் தன்னுடைய பணியாக அதனையேற்று தன் கடுமையான அச்சக வேலைகளுக்கு மத்தியில் என்னை தன் உற்ற உறவாக எண்ணி நிகழ்வை நடாத்தி முடித்த பெருமை மதிகலா்ஸ் உரிமையாளா் சதீஸ் அவர்களுக்கு உண்டு. (முழுநேர ஊண் உண்ணியான என்னை 23 ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி மதியம் வரை வெற்றிகரமாக தாவர உண்ணியாக்கிய பெருமை அவரது குடும்பத்தவரைச் சாா்ந்தது) 

---

காலை 10.10 மணிக்கு நிகழ்வு அரங்கில் ஆரம்பமானது. இருநூருபேரைக் கொள்ளக்கூடிய அந்த அரங்கில் நிகழ்வு ஆரம்பிக்கும்போது நாற்பது வருகையாளா்கள் தமது வருகையை பதிவுசெய்திருந்தனர். நான் கிளிநொச்சியில் பிறந்தவன். கடந்த 25 வருடங்களாக திருகோணமலையில் வசிப்பவன். யாழ்ப்பாணத்தில் என் பொத்தக வெளியீடு. யாழ்ப்பாணத்தில் பெரிய அறிமுகமில்லாத ஒருவனின் பொத்தக வெளியீட்டுக்கு சுமாா் 70 போ் வந்திருந்ததை எத்துணை நன்றிக்கடனுடன் நினைவு கூா்வது. 

---

பொத்தக நிகழ்விற்கான அரங்கைத் தீா்மானிப்பதில் இருந்து பேராசிரியா் கே.ரி. கணேசலிங்கம் அவா்களைத் தொடா்புபடுத்தி மதிப்பீட்டுரைக்கு ஏற்பாடுசெய்து ஊடகவியலாளர்களின் தொடா்புகளைத் தந்து அழைப்பிதழ்கள் யாருக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லி தலைமையையும் பொறுப்பெடுத்து என்னைத் தன் அன்பால் பெருமையடையச் செய்தவா் பேராசிரியா் ரகுராம்.

---

முன்னெப்போதும் அறிமுகமின்றிய என்னை ஏற்றுக்கொண்டு பொத்தகத்தின் மீது தன் முழுமையான பாா்வையைச் செலுத்தி அதன் மதிப்பை குறித்த நேரத்திற்குள் வாா்த்தைகளால் முற்றுமுழுதாக வெளிப்படுத்தி உடனடியாகவே தனது மாணவா்களுக்காக 50 பொத்தகங்களையும் கட்டளையிட்டு பெருமை சேர்த்தவா் பேராசிரியா் கே.ரி கணேசலிங்கம் அவர்கள்.

---

நூலக அரங்கை நாம் கையேற்று பின் கையளிக்கும் வரை தமது வேலை நேரமற்ற சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எம்மோடு தேவைப்படும்போதெல்லாம் தொடா்பில் இருந்து வழிப்படுத்தினா் பல்கலைக்கழக நூலகா் கலாநிதி கேதீஸ்வரன் மற்றும் நிா்வாகி சசிகலா அவர்கள். 

---

எப்போதும் போலவே காத்திரமான தன் உரையினை “பன்னாட்டுக் குற்றங்களும் ஈழத்தமிழினமும்” என்ற தலைப்பில் நிகழ்த்தினாா் கஜேந்திரகுமாா். நிகழ்வு ஏற்பாடு, வரவேற்பு, தொகுப்பு மற்றும் நான் திடீரென எதிா்கொண்ட எதிா்பாராத தடங்கல் என்பவற்றில் என்னுடன் கூட இருந்தனா் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா். வெள்ளிக்கிழமை (26 ஆம் திகதி) காலையிலேயே கஜன் (செ. கஜேந்திரன் – எங்களின் நாடாளுமன்ற உறுப்பினா்) அழைப்பையெடுத்து செய்ய வேண்டிய வேலைகள் தொடா்பாக கலந்தாலோசித்து திட்டங்களையும் தீட்டிக்கொண்டாா். யாழ் மாவட்ட அமைப்பாளா் தீபன், சுதா, பிருந்தா, தமிழ்மதி, கிருபா அக்கா, ராஜி, அப்பன், மதன், துளசி, கரன்,  மற்றும் நண்பா்கள் நிறைவு வரை கூடவே இருந்தனா். உற்ற நண்பன் தான் சாா்ந்த அரசியல் கட்சியினால் வருவது தடைப்பட்ட கடைசி நேரத்தில் வரவேற்புரையை நிகழ்த்திப் பெருமை சோ்த்தாா் கிந்துயன்.

---   

யாழ் மாவட்ட ஊடகவியலாளா்களின் பணி சிறப்பானதும் மெச்சத்தக்கதும். அவா்கள் இந்நிகழ்வை தம்மாலியன்ற அளவிற்கு நிகழ்விற்கு முன்பாக வெளிப்படுத்தியிருந்தனா். இந் நன்றி மடலை எழுதும் இத்தருணம் வரை அவா்கள் நிகழ்வின் பின்னரான பிரிசுரிப்புக்களைச் செய்தவண்ணமே உள்ளனா்.

---

நிகழ்விற்கு நேரத்திற்கே வருகைதந்தவா் எனது குரு விந்தன் அவா்கள். அவா் தன் நண்பா்களை மகிழ்சி சோ் மற்றும் சிவம் சோ் ஆகியோரையும் அழைத்து வந்திருந்து சிறப்பித்தாா். என்னைச் செதுக்கிய அந்தச் சிற்பிக்கு என்னாலியன்றதைச் செய்ய முயன்றேன். போதுமானதாக இல்லை.

...

பெருந்தொகைப் பணமுடிப்பை (பொற்கிழி என்று சொல்லலாமா?) கிளி கனிஸ்ட வித்தியாலயத்தில் கற்று இன்று ”கனிஸ்டா 70Ts” என்ற குழுவாக இயங்கத் தொடங்கியிருக்கும் என் நண்பா்கள் வாழத்துக் காணொளியுடன் 

அனுப்பியிருந்தாா்கள். இந்த மண் சுமந்த வலியைச் சட்டரீதியாக அணுக வழிசமைக்கும் என் பொத்தகத்தை தமிழா் தாயகமெங்கும் கொண்டுசோ்க்கும் பணியைச் செய்யத் தேவையான நிதியாக அனுப்பி அவா்கள், இந்த மண்மீது அவா்களுக்கிருக்கும் பற்றை வெளிப்படுத்தியிருக்கின்றாா்கள்.

---   கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.