வியக்க வைத்த பூப்புனித நீராட்டுவிழா!!
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மிகமிக ஆடம்பரமான பூப்புனித நீராட்டு விழா பலரையும் வியக்க வைத்திருக்கின்றது.
இன்றையதினம் காங்கேசன்துறை வீதி - பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.
அதேசமயம் தென் பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் அங்கு ஒன்றுகூடி இருந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் நிகழ்வு குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை