முல்லைத்தீவில் பாடசாலை மாணவி கடத்தல்!

 


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 17 ஆம் திகதி அன்று மாலை 5.30 மணியளவில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் NP CAH 6552 என்ற இலக்கமுடைய வெள்ளைக்கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பல் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவியினை வீதியில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கடத்தலுடன் தொடர்புடைய நான்கு பேரில் பிரதான சூத்திரதாரி தவிர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய படத்தில் காணப்படும் பிரதான சூத்திரதாரியினை நேரில் கண்டவர்கள். 076 – 8167531 இந்த தொலைபேசிக்கு தகவலை வழங்குமாறும், குறித்த சூத்திரதாரி தொடர்பான தகவலை தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் குறித்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.