கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்!!

 


அனைத்து வகையான சரும பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு அற்புத சக்தி வாய்ந்த பொருள் கஸ்தூரி மஞ்சளாகத்தான் இருக்க முடியும்.


முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள், முக அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக கஸ்தூரி மஞ்ள் உள்ளது.


இந்த கஸ்தூரி மஞ்சள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் செயல்பட்டு நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது.


சூரிய ஒளியினால் ஒரு சிலருக்கு முகம் இயற்கை பொலிவினை இழந்து கருத்து காணப்படும். இப்படி கருமையான சருமத்தை கொண்டவர்கள் கஸ்தூரி மஞ்சளை பூசி வர நாளடைவில் உங்களுடைய இயற்கை நிறம் மீண்டு வெள்ளையாக மாறி விடுவீர்கள்.


கஸ்தூரி மஞ்சளை நேரடியாக பயன்படுத்தக்கூடாது, கஸ்தூரி மஞ்சள் பொடியாக அரைக்க நீங்கள் எப்பொழுதும் மஞ்சள் கிழங்கை வாங்கி காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வது தான் நல்லது.


கஸ்தூரி மஞ்சளை நீங்கள் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவுக்கு தகுந்தபடி பயத்தம் மாவை சேர்க்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் பயத்தம் மாவு சேர்த்து குழைத்து முகத்துக்கு பேக் போல போட்டு நன்கு உலர விட்டு விடுங்கள்.


பத்து நிமிடம் கழித்து முகத்தை நன்கு அலசினால் ரொம்பவே பளிச்சென மிருதுவான சருமம் நமக்கு கிடைக்கும்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.