பிரகாஷ் இயக்கத்தில் வனவேட்டை !
யுத்த காலத்தின் பின் வன்னிமண்ணிலிருந்து வரக்கூடிய சினிமா சார்ந்த படைப்புக்கள் விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது .
முல்லை மண்ணின் மல்லாவி சேர்ந்த இயக்குநர் பிரகாஷ் அவ்வப்போது குறும்படங்களை வெளியிட்டு வருபவர் .
தற்போது அவரின் இயக்கத்திலும் குணாவின் உதவிஇயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் நிதர்சனின் ஒளித்தொகுப்பில் நவம்,ஜக்சன்,விதுசன்,கீர்த்தனா,கமல்,தேனுசன் மற்றும் பலரின் நடிப்பிலும் வெளிவந்திருக்கிற குறுந்திரைப்படம் தான் " வனவேட்டை " .
வெளியிட்டு ஒருநாளிலேயே மூவாயிரம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது
பின்தங்கிய கிராமபுற பிரதேசமென்றாலும் சினிமா மீது கொண்ட தாகத்தில் வித்தியாசன திரைக்கதையை கையிலெடுத்து குறுந்திரைப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்
இவர்களின் இந்த முயற்சி அசுர வளர்ச்சியை நோக்கி செல்ல ஆதரவு கொடுங்கள்
கருத்துகள் இல்லை