Samsung-இன் One UI 5.0 அப்டேட் வெளியாகும் திகதி!!
சாம்சங் மொபைல் போனின் பிரத்தியேக லான்ச்சரான One UI 5.0யின் வாடிக்கையாளருக்கான பெட்டா சோதனை நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் சாம்சங் நிறுவனம் இதை அறிவித்திருந்தது. எனவே சோதனை முடிந்து அக்டோபர் மாதத்தில் இது லான்ச் ஆகலாம் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் எந்த தேதியில் இது அறிமுகமாக உள்ளது என்று வதந்திகள் பரவி வருகின்றன.
கடந்த வாரங்களில் தான் சாம்சங்கின் Galaxy S22 மாடல் பயனாளர்களுக்காக சாம்சங்கின் அடுத்த நிலை லான்ச்சரான ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான One UI 5.0 யை பெட்டா சோதனைக்காக சாம்சங் வழங்கியிருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் அக்டோபர் 17 லிருந்து 19 ஆகிய தேதிகளில் சோதனை முடிந்து மக்கள் பயன்பாட்டிற்க்கு One UI 5.0 வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை