பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!
தன்னை ஒரு மதகுருவாக காட்டிக் கொண்டு பல பாடசாலை சாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் முறைப்பாட்டின்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 அகவைக் கொண்டவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர், வாட்ஸ்எப் மூலம் சிறுவர்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் மதகுரு என்ற போர்வையில் சிறுவர்களை ஈர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலி நீதவான் நீதிமன்றில முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை