பகீர் தகவலை வெளியிட்டது மொட்டு கட்சி!!

    

 


போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அதற்காக பெருமளவு நிதி வழங்கிவருவதாகவும் அரசின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (01) தெரிவித்தது.

எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் போராட்டத்தின் பின்னணியில் சூழ்ச்சித் திட்டம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார். இலங்கையை தோல்வி கண்ட நாடாக (பெயில் ஸ்டேட்டட்) மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இ தற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன. போரால் அடையமுடியாத இலக்கை, வேறு வழியில் அடைய முடியும் என அந்த குழுக்கள் கருதுகின்றன.

எனவே, உங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுங்கள், ஆனால் உங்களுடன் இருப்பவர்கள் யாரென்பதையும், அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதையும் அடையாளம் கண்டு கொள்ள விழிப்பாகவே இருக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

எனக்கு நேற்று (31) கிடைத்த தகவலொன்றால் நான் அச்சம் அடைந்தேன். கனடாவில் உள்ள நபரொருவரே எனக்கு இந்த தகவலை வழங்கினார். சமூக வலைத்தளங்களில், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பதிவொன்றை இட்ட கையோடு, சர்வதேச அமைப்பொன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது.

பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், நிதி உதவி வழங்க தயார் எனக் கூறப்பட்டுள்ளது. இப்படி பல சூழ்ச்சிகளுக்கு மத்தியிலேயே அரசை முன்னெடுக்கின்றோம். . நாட்டு பணத்தை எவரும் கொள்ளையடிககவில்லை. அந்திய செலாவணி இருப்பை கொள்ளை அடிக்கவும் முடியாது. எனவே, போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டார். மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு தீவிரவாத, பாசிசவாத முத்திரை குத்தப்படுகின்றது, மக்களை அச்சம் கொள்ள வைக்கவும், தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது என எதிரணிகள் சுட்டிக்காட்டிவரும் நிலையிலேயே, மொட்டு கட்சி செயலாளர் இப்படியொரு தகவலை வெளியிட்டுள்ளார்.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.