இலங்கை அணியில் இருந்து மேலும் சிலர் தப்பியோட்டம்!

 


பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக AFP செய்தி சேவை தெரிவித்துள்ளது.


அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.

ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாட்கள் விசா இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலை காரணமாக வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் அணியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.