வரலாற்று மேதை - ஸ்டீபன் ஹாக்கிங்!!

 


எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது, எண்ணங்களே இனிமை தருகிறது, எண்ணங்களே நிம்மதி தருகிறது, எண்ணங்கள் வண்ணமாக அமையாது விட்டால். வாழ்க்கைஅர்த்தமற்றுப்போய்விடும். 


முயற்சி திருவினை யாக்கும்..... முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.” என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு உடல் ஊனம் ஒரு தடை இல்லை மனம் தைரியம் இருந்தால் போதும் என்று எடுத்துரைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.


இயற்பியல் உலகத்தில் அற்புதத்தை நடத்திய அற்புத நாயகன் நிஜத்தில் இருந்த தோற்றமோ சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டமானது.


நம் வாழ்வில் நாம் சாதனை படைக்க தடைகள் எத்தனை வந்தாலும் அதனை உடைத்தெறிந்து முன்னேறி செல்பவர்கள் மட்டுமே வரலாறு படிக்கமுடியும் என்று சொல்லி தனக்கு வந்த தடைகளை எல்லாம் தாண்டி வரலாற்று நாயனாக இருந்துருக்கிறார் ஹாக்கிங்.


ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரத்தில் பிராங்க் மற்றும் இஸபெல் ஹாக்கிங் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மருத்துவமும் தாய் மெய்யியல் துறையிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.


கலீலியோ கலிலியின் நினைவு நாளிலும், ஐன்ஸ்டைன் பிறந்த நாளன்று பிறந்தார் ஸ்டீபன். ஹாக்கிங் குடும்பத்தார்கள் ஹாக்கிங்கை உயர்ந்த பள்ளியில் சேர்க்கவே ஆசைப்பட்டனர் ஏனெனில் அவர்கள் படிப்புக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தனர்.


1960 ல் தனது கல்லூரி படிப்பை முடித்த ஸ்டீபன் ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால் நாளடைவில் உடலின் பாகங்கள் செயலிழக்க தொடங்கினர்.


ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், ‘ஈக்வலைஸர்’ என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு… இன்று கன்னத் தசைகளின் அசைவுகள்மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி வருகிறார்.


வாயில் மேல் வரிசையில் பற்கள் கிடையாது கீழ் வரிசையில் சில பற்களால் உதடுகள் வெளியில் தடித்து காணப்படும். வலது பக்கம் தலை சாய்ந்து காணப்படும் ஸ்டீபன் உடலின் கன்னத்து அசைவை தவிர மற்ற உறுப்புகளின் அசைவின்றி ஒரு சிறு பிள்ளை போல் வீல்சேரில் காணப்படுவர்.


இம்மனிதனின் காட்சியை காணும்போது கண்களின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆனால் அவர் செய்த சாதனைகளை பார்க்கும்போது மனதளவில் பெரும்புரட்சியை ஏற்படுத்துகிறது.


இவரது கண்டுபிடிப்புகள்....


1. ஒளி கருந்துளைக்கு அருகே செல்ல முடியாது. ஏனெனில் ஒளியை அவை விழுங்கி விடும் என்றும் கருந்துளை வெளியேற்றும் வெப்பத்தால் கதிர்வீச்சு உருவாகிறது என்றும் நிரூபித்துக் காட்டினார்.


 2. பெரு வெடிப்புக்குப் (Big Bang) பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, புரோட்டான் அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றியிருக்க  வேண்டும் என்று கூறினார். அவற்றை மினிக் கருந்துளைகள் (Mini Black Holes) என்றார்.


3.விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை. ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.


4. கருந்துளையினுள் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துகள்கள் (Particles) வெளியேறுகின்றன என்றும், அதன் மூலம் காலப்போக்கில் அவை இல்லாமல் போய்விடுகின்றன என்றும் கூறினார்.அறிவியல் உலகில் மாற்றும் இல்லாமல் சமூக உளவியல் அடிப்படையிலும் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியவர் 14 மார்ச்  2018 அன்று 76 வயதில் இறைவனடி சேர்ந்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.