மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

 


கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்பு

மகிழடித்தீவு (தெற்கு) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியான குருகுலசிங்கம் டிவைனா (14) என்பவரே தனது வீட்டு அறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று மாணவியின் பெற்றோர் தங்களின் வயலினை பார்வையிட சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சம்பவ தினம் பாடசாலை கற்கையினை முடித்து விட்டு வீடு திரும்பி தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் ,சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.