சந்தையில் தரமற்ற டின்மீன்கள் விற்பனை!!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தகரப் பொருட்கள் பெருமளவில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் சில டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள் மனித பாவனைக்கு தகுதியற்றவை என சுங்கத்துறையினரால் அழிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு அந்த ஏலங்களில் இருந்து எடுக்கப்பட்டு புதிய பொதிகளை பயன்படுத்தி சந்தைக்கு விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில பெரிய அளவிலான இறக்குமதியாளர்கள் இந்தக் கடத்தலை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களை விட தரமற்ற டின் மீன்கள் நூறு முதல் இருநூறு ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை