பேசுங்கள் ----- பிறப்பீா்கள் - கோபிகை!!

 


ஒரு ஆண் கல்வி கற்பது தனக்கானது என்றும் ஒரு பெண் கல்வி கற்பது சமூகத்திற்கானது என்றும் கூறுகின்றனா்.

பெண்மை தாய்மையில் சிறக்கிறது. தாயானவள் தன் ஆளுமையினாலேயே தன் பிள்ளைகளிடம் சிறக்கிறாள்.

பெரும்பாலும் பிள்ளைகளை கவனிக்கும், வளா்த்தெடுக்கும் பொறுப்பு தாய்மாரிடமே உள்ளது. அந்தப் பொறுப்பில்

வெற்றியடையவேண்டும் என்றால் ஆற்றல் நிறைந்த ஒரு உலகில் தாயும் பிரவேசிக்கவேண்டும்.

பிள்ளைகளைப் பொறுத்த வரையில் அம்மா எப்போதும் பிரமிப்பாகவே இருக்க வேண்டும். "எனக்குத் தெரியாது" எனச் சொல்லும் அம்மாக்கள் பிள்ளைகளால் அவ்வளவாய் ஈர்க்கப்படுவதில்லை. உங்கள் பிள்ளைகளிடம் நிறையப் பேசுங்கள், அப்போது நிறைய அவர்களிடமிருந்து கற்றுக் கொளவீர்கள். உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு இரு மடங்கு அவர்கள்

சிந்திப்பார்கள். எதையாவது தேடிப் படியுங்கள். படிப்பு என்பது கல்வி மட்டுமல்ல, புத்தகங்களைத் தேடி படிப்பதும் தான்.

பிள்ளைகளுக்கும் நமக்கும் எல்லைக்கோடு ஒன்றிருக்கும். அதை அவர்கள் தாண்டிவராமலும் நாம் அதைத் தாண்டிப்

போகமாலும் தேவையான சுதந்திரத்தை வழங்கவேண்டும். எவ்விதம் அச்சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்த வேண்டும்

என்பதில் தாய் பிரமிப்பாகவே இருக்க வேண்டும். பிள்ளைகள் கற்றுத் தருபவா்களாகவும் இருப்பார்கள்.

தாய் என்பவள், அன்பின் பிறப்பிடமாக மட்டுமன்றி ஆளுமையின் சிறப்பிடமாகவும் இருக்கவேண்டும். அம்மாவிடம்

இருந்து பிள்ளை அறிந்துகொள்வதைக் காட்டிலும் அதிகமாக வேறு யாரிடமும் அறிந்துகொள்ள முடியாது. உலக

வரலாறுகள் பற்றியும் ஆளுமையாளா்கள் பற்றியும் சாதனையாளா்கள் பற்றியும் பிள்ளைகளோடு உரையாடுங்கள்.

உறவுகளைப் பேணவேணடியதன் அவசியத்தை சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் உங்கள் வாழ்வியல்

நடைமுறையில் நடந்து காட்டுங்கள்.அம்மா பாரதியாரைப் பற்றிச் சொன்னாலோ, விவேகானந்தரைப்பற்றிச் சொன்னாலோ தான் பிள்ளை அதனைத் தேட

ஆரம்பிக்கும். தன் நண்பா்களிடம் அவ்விடயம் பற்றி விபரிக்கும். செய்தித்தாள்களை வாசிப்பதோடு நின்றுவிடாது

அன்றைய நாட்டுநடப்பு பற்றி பிள்ளைகளிடம் அலசி ஆராயுங்கள். அப்போது தான் பிள்ளை சமூகத்தை

அறிந்துகொள்ளும். தான் வாழும் சூழலை தெளிவாகப் புரிந்துகொள்ளும். மாற்றங்களுக்கும் நியதிகளுக்கும் ஏற்ப தன்னை

மாற்றிக்கொள்ளும். சமூக நீரோட்டத்தோடு இணைந்து ஓடத்தொடங்கும்.

அம்மா என்பவள் பிரமிப்பிற்குரியவள் என உணா்ந்துவிட்டால் நிச்சயமாக அதே பிரமிப்பினை பிள்ளைகளும்

காண்பிப்பார்கள். அன்போடு அறிவும் ஆற்றலும் கொண்ட அம்மாக்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு பிரமிப்பாகவே

உள்ளனா்.கோபிகை

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.