கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது!!
இலங்கை கடற்படையினரின் கடற்கண்காணிப்பின் போது, கடல் வழியாக வெளிநாட்டுக்குச் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 10 பேர் இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) இரவு தலைமன்னார் - குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது இவர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இவர்களில், படகு ஓட்டுநர்களான இருவர் உட்பட 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும்18 வயதுக்குட்பட்ட 04 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.
சந்தேகநபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை