ரெட்டாவின் கணக்கில் பணமிட்டவர் கண்டுபிடிப்பு!!

 


ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்தவர்.  சில தினங்களுக்கு முன்னர் இவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் நேற்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேகநபர் நேற்றைய தினம் அங்கு வருகை தந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


போராட்ட காலத்தில் அதற்காக  தனிப்பட்ட பணத்தைச் செலவு செய்து வரும் தம்மை இவ்வாறான பொறிகளின் ஊடாக சிக்கவைக்க முடியாது என ரதிந்து சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.