சிறுவர் பாலியல் தொந்தரவு குறித்து அறிவிக்க விசேட இலக்கம்!!

 


சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.


 கற்றல் செயற்பாடுகள் இணையத்தளம் ஊடாக நடைபெறுவதால்   சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதனைப் பயன்படுத்தி பலர் சிறுவர்களுக்கு தொல்லை கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. .


அது மட்டுமன்றி பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.


இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.