பன்னாட்டுக் குற்றங்கள்- International Crimes


ஒரு ஆறு ஆண்டுகால தேடல் ஏழாவது ஆண்டில் பொத்தக வடிவம் பெறுகின்றது.

---

பன்னாட்டுக் குற்றங்கள் தொடா்பாக வாசிக்க ஆரம்பித்த பொழுது எந்த விதமான தமிழ் பொத்தகங்களையும் என்னால் காண முடியவில்லை. அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. 

---

ஆனால் அப்பன்னாட்டுக் குற்றங்களுக்கு முகம்கொடுத்த ஒரு இனமான தமிழினம் தனக்கிழைக்கப்பட்டது பன்னாட்டுக்குற்றம்தான் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்ளும்? என்ற கேள்வியே இந்தப் பொத்தகத்தின் ஊற்றுவாய்.

---

ஐக்கியநாடுகளின் சட்டங்களின் படியும், நியூரம்பேர்க், யூகோஸ்லாவியா, ருவாண்டா ஆகிய பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயங்களின் படியும், கலாசார இனப்படுகொலைக்கான கனடாவின் ஆணைக்குழு போன்ற சில நாடுகளில் உருவாக்கபட்ட ஆணைக்குழுக்களின் படியும் பன்னாட்டுக் குற்றங்கள் எவையென்று வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை இலகு தமிழில் வெளிப்படுத்தும் ஆவணமாக இப்பொத்தகம் அமைந்துள்ளது.

---

சுமார் 150 இற்கும் மேற்பட்ட உசாத்துணைகளைக் கொண்டுள்ள இப்பொத்தகம் இனிவரும் காலங்களில் ஆராய்ச்சிகளில் ஈடுபடவுள்ள மாணவா்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என நம்புகிறேன். மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு, டொச் மொழிபெயர்ப்புகளிலும் வெளியாகவுள்ளது.

---

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.