ஏதிலி - கவிதை!!
கவிதைகள்
நடக்க மறுக்கும்
இதயம்
இளகிக்கனக்கும்
எழுதுகோல் மங்கும்
எழுத்துத்தடுமாறும்
உன்
முகம் பார்க்காத நாளெல்லாம்
ஏனோ மனம்
மலர்ச்சியற்றுப்போகும்
நீண்டு கிடக்கும் வெளிகளில்
வாழ்வதாய்
நினைவுகளின் அலைச்சல்
சொல்லத்தெரியாமல்
சொல் வரண்டு தகிக்கும்
உன் பார்வைகளில்
என் பாசம் வீழ்ச்சியுற்றதாய்
அறிந்தேன்..
நீயுள்ளவரை
நானேது ஏதிலி..!
கருத்துகள் இல்லை