பொதுஜன பெரமுனவின் சில எம்.பிக்கள் எதிர்கட்சியில் இணைவு

 ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில்  இணைந்துள்ளனர்.


இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.


பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல  ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக அவர் அறிவித்தார்.


இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.


இதன்போது, விசேட உரையொன்றை நிகழ்த்திய, நாடாளுமன்ற பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கடந்த காலங்களை நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்ததை போன்றே தற்போது மீண்டுவருவதற்கான சக்தி மக்களிடம் உண்டென நம்புகிறேன்.


அந்த காலங்களின் மக்கள் கருத்துக்கு செவிசாய்க்கும் நாடாளுமன்றம் ஒன்று அன்று இருந்தது. நாட்டின் பொது கருத்துக்கும் நாடாளுமன்றின் நிலைப்பாட்டுக்கும் பரஸ்பர வேறுபாடு உள்ளது.


இது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவாத்தையிலும் சிக்கலை ஏற்படுத்தும்.


மக்கள் எம்மிடம் எதனையும் கோரவில்லை. எமது ஆட்சி காலத்தில் மக்களுக்கான சரியான வேலைத்திட்டங்களை நாமே முன்வைத்தோம்.


அதன் பிரதிபலிப்பாக எமக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், ஆளும் கட்சியின் சிலரது செயற்பாடுகளால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது.


இன்று மக்கள் விரும்பும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்படுவது மிக பாரதூரமானதாகும்.மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுமாயின் அதற்கு தராளமாக எமது ஆதரவை வழங்குவோம் என்றார்.


இவ்வாறானதொரு நிலைமையில் தான் எமது கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சுயாதீன உறுப்பினர்களாக அமரத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.