லெஜண்ட் சரவணனின் படம் பார்க்கச் சென்ற சூப்பர் ஸ்டார்!!

 


தொழிலதிபராக முத்திரை பதித்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.


இப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், லெஜண்ட் சரவணனின் நடிப்பை நேரில் காண சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தி லெஜண்ட் படத்தின் படப்பிடிப்பிற்கே சென்றுள்ளார்.  அங்கு இருவரும் சந்தித்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 


லெஜண்ட் சரவணன் தன்னுடைய சினிமா இன்ஸ்பிரேஷன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.