அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ ட்ரெய்லர் வெளியீடு!

 


நடிகர் அதர்வா நடிக்கும் ’ட்ரிக்கர்’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செப்டம்பர் 10) வெளியானது.


நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’குருதி ஆட்டம்’. இந்த படத்தைத் தொடர்ந்து அவர் நடித்திருக்கும் அடுத்த படம், ’ட்ரிக்கர்’. இந்தப் படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ’ட்ரிக்கர்’ படத்தில் நடிகர் அதர்வாவுடன், தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னிஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ’இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்திற்கு வசனம் எழுதி உள்ளார்.


கடத்தப்படும் குழந்தைகளை போலீஸ் எப்படி மீட்கிறது என்பதே படத்தின் கரு. இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.


ஆக்சன் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று (செப்டம்பர் 10) மாலை வெளியாகியது.


இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும், “நெருப்பு ஒன்றுதான் வேறொன்றை அழித்துவிட்டு, தான் வாழும்” என்கிற வசனம் ரசிகர்களை விசிலடிக்கவைக்கிறது.


ஜெ.பிரகாஷ்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.