மிகப் பெரிய வாயை கொண்ட பெண்!!
அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் எனும் 21 வயதான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார்.
இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
இந்த அங்கீகாரத்துடன் சமூக வலைத்தள பிரபலமாகவும் சமந்தா ரம்ஸ்டேல் விளங்குகிறார். 32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்கின்றனர்.
அண்மையில் அவர் பற்சிகிச்சைக்காக பற்சிகிச்சை நிலையமொன்றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா தமது பற்சிகிச்சை நிலையத்துக்கு வருவதை அறிந்த ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், அவர்கள் செங்கம்பளம் விரித்து சமந்தாவுக்கு வரவேற்று அளித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது, வாயை விரித்து வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் தேவையேபடவில்லை என மருத்துவர் எல்க் சேயுங் தெரிவித்துள்ளார்.
பற்சிகிச்சை நிலையத்துக்கு சென்றபோது பிடிக்கப்பட்ட வீடியோவையும் டிக்டொக்கில் சமந்தா ரம்ஸ்டேல் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ 27 லட்சம் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமந்தா ரம்ஸ்டேல் வாயை முழுமையாக திறந்தால் இரு உதடுகளுக்கும் இடையிலான இடைவெளி 6.56 சென்ரிமீற்றராக உள்ளது. அவரின் வாயை அகலமாக விரிக்கும் போது அதன் இரு முனைகளுக்கு இடையிலான நீளம் 10 சென்ரிமீற்றராக உள்ளது.
அமெரிக்காவின் கெனக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் சிறிய வயதிலிருந்தே பெரிய வாயைக் கொண்டிருந்தார். அவரின் குடும்பத்தில் வேறு எவருக்கும் இது போன்ற வாய் இல்லை.
பாடசாலையில் தனது பெரிய வாய் காரணமாக தான் கேலிக்கு ஆளானதாக சமந்தா கூறுகிறார்.
ஆரம்பத்தில் தனது பெரிய வாய் குறித்து தான் கவலையடைந்த போதிலும் பின்னர் தான் அதை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
‘எனது வாய் காரணமாக நான் இந்தளவு பிரபலமாகுவேன் என நான் எண்ணியிருக் கவில்லை’ எனவும் சமந்தா ரம்ஸ்டேல் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை