நடிகர் சூர்யாவை கண்கலங்க வைத்த நடிகர் கார்த்தி!!

 


தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமாரின் இரு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.


அதன்படி சூர்யா தற்ப்போது அவரின் 42-வது திரைப்படமான சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் பெரிய வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில் நடிகர் சூர்யா அளித்துள்ள பழைய பேட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் நடிகர் சூர்யா தனது தம்பியான கார்த்தி குறித்து பேசியிருக்கிறார்.


நடிகர் கார்த்தி தனது படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது ஒரு அண்ணனாக சூர்யா எதுவும் செய்யவில்லை என பீல் செய்தாராம். அவர் வெளிநாட்டில் கஷ்டப்படுவத்தை அவரின் அம்மாவின் மூலம் கேள்விபட்ட சூர்யா மிகவும் வருத்தப்பட்டாராம்.


அப்போது தான் கார்த்தி அவரின் அண்ணன் சூர்யாவிற்கு மெயில் செய்தாராம். அதில் சூர்யாவை பார்த்து தான் இதுவரை அனைத்தையும் செய்துவந்ததாகவும், உனது பாராட்டிற்காக தான் மிகவும் ஏங்கியதாகவும். ஒரு நண்பனாக தன்னை ஏற்றுக்க வேண்டும் என நினைத்தாகவும் கார்த்தி குறிப்பிட்டு இருந்தாராம்.இதனால் எப்போதும் அழுகாத சூர்யா அந்த மெயிலை பார்த்தவுடன் கண்கலங்கியதாக தெரிவித்து இருக்கிறார்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.