பிரான்ஸ் ஸ்பைடர் மேன் கைது!!

 


உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் ஸ்பைட்ர் மேன் என்று அறியப்படும் எலயின் ரொபர்ட் என்பவர் பாரிஸில் உள்ள 48 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மீது ஏறி தனது 60 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியுள்ளார்.


எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாது 'டுவர் டொடல் எனர்ஜிஸ்' என்ற கட்டடத்தின் மீது ஏறியதை அடுத்து பாரிஸ் நகர காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அவர் உயரமான கட்டடங்களின் மீது பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறி உலகப் புகழ்பெற்றுள்ளார்.

ஏற்கனவே பிரான்ஸ் ஸ்பைடர், டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா மீதும் பாதுகாப்பின்றி ஏறி உலகின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.