பட்டங்கள் பறக்கவிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி போராட்டம்!!

 


மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி பட்டங்களை பறக்கவிட்டு 50 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50 நாளையிட்டு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று (19) பட்டங்கள் பறக்க விட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்ற 100 பேராட்டத்தின் 50 வது நாள் போராட்டத்தையிட்டு 8 மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பல கோரிக்கை அடங்கிய வாசகங்கள் கொண்ட பட்டங்கள் தயார்படுத்தப்பட்டு அதனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.