யாழில் இடம்பெற்ற இரத்த தான முகாம்!!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்.நல்லூரில் இரத்த தான முகாம் ஒன்று அமைக்கப்பட்டு இரத்த தானம் வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிகழ்வானது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதுடன் பலர் இதில் கலந்து கொண்டு குருதித் தானம் வழங்கி வருவதனை அவதானிக்க முடிகிறது.
மேலும், இன்றைய தினம் சிறுவர்களுக்கான சித்திரம் வரையும் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறித்த சித்திரப்போட்டியில் தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் வகையில் அவரின் உருவப் படத்தினை சிறுவர்கள் வரைந்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை