கொழும்பில் பலத்த தீப்பரவல்!
பாலத்துறை தொட்டலங்க கஜிமாவத்தை பகுதியின் இன்றிரவு (27) பாரிய தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தீயணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்களும், 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரவு 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இப்பகுதியில் வீதிகள் குறுங்கலாக உள்ளதால் பெரிய தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை